THAMIMUN ANSARITHAMIMUN ANSARI

Advertisment

தஞ்சாவூரில் மனித நேய ஜனநாயக கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமையில் நடைப்பெற்றது.

அதில் எதிர்வரும் டிசம்பர் 6 அன்று, பாபர் மஸ்ஜித் வழக்கில், சட்டத்தின் அடிப்படையில், விரைந்து தீர்ப்பை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், இதில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த பொதுமக்களும் பங்கேற்பார்கள் என தீர்மானிக்கப்பட்டது.

THAMIMUN ANSARI

Advertisment

அந்த வகையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம், புதுச்சேரி நகரங்களில் உள்ள விமான நிலையங்களையும், தஞ்சாவூரில் உள்ள ராணுவ விமான நிலையத்தையும் முற்றுகையிடுவது என்று முடிவு செய்யப்பட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.