thamimun ansari

தமிழகத்தில் பல மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அவ்வளவு தூரம் செல்ல முடியாத பொருளாதார பிரச்சனை உள்ள நாகை மாணவர்கள் தன்னை அணுகலாம், நண்பர்கள் மூலம் உதவி செய்கிறோம் என நக்கீரன் இணையதளம் மூலம் அறிவித்திருந்தார் நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி.

Advertisment

இந்த செய்தி சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. இதில் 5 பேர் உதவிகளை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத சென்றனர்.கேரளாவிலிருந்து முதலில் திரும்பியுள்ள மாணவி பிரியதர்ஷினி, நாகையில் உள்ள தமிமுன் அன்சாரியை அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் தனது தந்தை வெங்கட் மற்றும் தம்பியுடன் சந்தித்தார். அப்போது தமிமுன் அன்சாரியை பார்த்து, "நன்றி" அண்ணே... என்று கூறினார்.பதிலுக்கு அவர் "நீட்" தேர்வில் வெற்றிப்பெற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Advertisment