/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-05-06 at 1.03.13 PM.jpeg)
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்னசாமி.அவர் தனது மகன் கஸ்தூரி மாகாலிங்கத்தை நீட் தேர்வு எழுதுவதற்காக எர்ணாக்குளம் அழைத்துச் சென்றுருக்கிறார். மாநிலம் விட்டு மாநிலம் சென்ற மனசோர்வும், வெயிலினால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை வாட்டியிருக்கிறது.
இன்று காலை அவரது செல்ல மகன் எர்னாகுளத்தில் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்து இருக்கிறது.மகனோ தன் தந்தை இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-05-06 at 1.03.18 PM (1).jpeg)
இத்துயரச் செய்தி தெரிந்ததும், நாகப்பட்டினத்திலிருந்து மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., முதல் நபராக அந்த கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூறினார். அவருடைய மனைவியும், மகளும் கதறி அழுதனர்.சற்று நேரத்தில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ஆடலரசன், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் ஆகியோர் வந்து சேர்ந்தனர்.
அங்கு திரண்டிருந்த பத்திரிகையாளர்களிடம் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி கூறியதாவது,இச்சம்பவம் அனிதாவை தொடர்ந்து, இன்னொரு துயரத்தை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஏற்படுத்திருப்பதாக கூறினார்.இது போன்ற குடும்பங்களின் சாபமும், கண்ணீரும் மோடி அரசையும், மத்திய அரசையும் சும்மா விடாது என்று கொந்தளித்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2018-05-06 at 1.03.15 PM.jpeg)
இறந்த பெரியவர் கிருஷ்னசாமி உடலை தமிழக அரசு தன் சொந்த செலவில் விளக்குடி கிராமத்திற்கு எடுத்த வரவேண்டும் என்றும், அந்த குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் ஆறுதல் நிதியாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் அவர் இறுதி சடங்கு உட்பட அனைத்திலும் மஜக பங்கேற்க்கும் என்றும், அவரது இறப்பு தமிழக மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.மேலும் முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தனது கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
Follow Us