நேற்று சைதை...இன்று மையிலை...நாளை? தொடரும் தமிழச்சியின் ரைடு..! (படங்கள்)

தென்சென்னை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று(05.09.2019) மையிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்திற்கு சென்ற அவர் ஆய்வில் ஈடுபட்டார். இரயில் நிலைய அதிகாரிகளிடமும் பணியாளர்களிடமும் நிலைய பராமரிப்பு குறித்து கேள்வியெழுப்பிய அவர், அங்கிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதேபோல், நேற்றைய தினம் சைதாப்பேட்டை இரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

Thamizhachi Thangapandian
இதையும் படியுங்கள்
Subscribe