டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரை அ.தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கரை அவர்களது இல்லத்தில் தம்பிதுரை எம்.பி. சந்தித்துப் பேசினார். அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருவரையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததாக தம்பிதுரை கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த, அதேநாளில் எடப்பாடி பழனிசாமி சார்பில் தம்பிதுரை எம்.பி. சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.