Advertisment

குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை

Thambi Durai

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளைக் முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோடநாடு விவாகரம் புணையப்பட்ட ஒருநாடகம். இதில் எந்த உண்மையுமில்லை. தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகள் நாடகமாகமாடி கொண்டிருக்கிறது.அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும். அந்த வெற்றியைக் சீர்குழைப்பதற்காக இந்த நாடகத்தைதிமுகவும், காங்கிரஸூம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது.

Advertisment

முதலில் குட்கா விவாகரத்தில் சிபிஐ விசாரணை கேட்டார்கள். தற்போது இந்த விவகாரத்தைக் நிகழ்த்தி கொண்டிருக்கிறார்கள். ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பதாக செய்தி வந்துள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் பங்கேற்பவர்கள் யாரும் ராகுலைக் பிரதமராக முன்நிறுத்தவில்லை. ஆனால் அந்த கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்றால் அதில் என்ன சூட்சபம் என கேள்வி எழுப்பிய அவர்,

திமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மத்தியில் யார் ஆட்சி அமைக்கிறார்களோ அதில் அங்கம் வைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செயல்பட்டு கொண்டு இருப்பதாக கூறினார்.

பாஜகவுடன் சில நட்போடு தான் இருக்கிறோம். ஆனால் அவர்கள் கொண்டு வந்த எல்லாவற்றையும் நாங்கள் ஆதரிக்கவில்லை என தெரிவித்த அவர்,அதிமுக கொள்கை உடைய கட்சி எனவும் அவர் தெரிவித்தார்.பாஜகவைக் தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது எனவும்

, பாஜகவைக் சுமத்து கொண்டு காலூன்ற வைக்க, அதிமுக என்ன பாவமா செய்தது என அவர் கேள்வி எழுப்பினார்.

பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை எனத் தெரிவித்த அவர்,அதிமுக கட்சியைக் மேலும் மேலும் வளர்க்க நாங்கள் பாடுபடுவோமே தவிர, இன்னொரு கட்சியைக் வளர்க்க நாங்கள் பாடுபட மாட்டோம்,தேர்தல் வரும் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் எனவும் தெரிவித்தார்

gurumurthy aiadmk Thambi Durai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe