கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகாரிகள் ரூபாய் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கங்கள் அளித்துக்கொண்டிருந்தனர்.

Thalavai Sundaram

Advertisment

இந்த விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான தளவாய் சுந்தரமும் இருந்தார்.

அப்போது அங்கு வந்த பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தளவாய் சுந்தரத்தை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். தளவாய் சுந்தரம், தான் யார் என்று எடுத்துச் சொல்லியும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது பலத்த அவமானமாக பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.