Thalaivi film J.Deepa petition

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற தமிழ்ப் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், இந்தியில் "ஜெயா"என்ற இந்திபடத்தை விஷ்ணுவர்தன் இந்தூரியும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் 'தலைவி', 'ஜெயா', 'குயின்' ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

தன் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 'தலைவி' திரைப்படத்தில் தன்னுடைய தந்தையை தவறாகச் சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்துபட நிறுவனத் தரப்பில், 'தலைவி' படத்தின் கதையை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் தீபா பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

Ad

இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை, நவம்பர் 10 மற்றும் 11 -ஆம் தேதிக்குள் முழுமையாக விசாரித்து முடிக்கப்படும் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.