Advertisment

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

Thakaisal Tamil Award to Dravidar Kazhagam President K. Veeramani

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Advertisment

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோட்டைக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை கொடுத்தனர். அதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை 3வது முறையாக ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

Advertisment

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தகைசால் தமிழர் விருதை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சுதந்திர தின விழாவில் வழங்கினார். இதேபோன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும் விருதுகளும், பதக்கங்களும் வழங்கப்பட்டன.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் வாழ்த்து

Award
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe