Skip to main content

பழனி முருகன் கோவிலில் தைப்பூசம்... பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற முதல் தேரோட்டம்!!

Published on 19/01/2022 | Edited on 19/01/2022

 

Thaipusam at Palani Murugan Temple ... The first festival held without devotees !!

 

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்று தைப்பூசத் திருவிழா. இந்த தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. 

 

Thaipusam at Palani Murugan Temple ... The first festival held without devotees !!

 

தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வள்ளி, தெய்வானை- முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று தைப்பூச தினத்தில் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி கோயில் ஊழியர்கள் அர்ச்சகர்களை கொண்டு திருத்தேர் உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

Thaipusam at Palani Murugan Temple ... The first festival held without devotees !!

 

சிறிய அளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்துக் குமார சுவாமி- வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கோவில் வளாகத்தில் வலம் வந்தார். வழக்கமான தைப்பூச நாட்களில் நடைபெறக்கூடிய தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை நான்கு ரத வீதிகளில் இழுக்கக் கூடிய நிகழ்வு நடைபெறும். கரோனா தொற்று பரவல் காரணமாக எளிமையான முறையில் தேரோட்ட நிகழ்ச்சியை கோவில் ஊழியர்கள் நடத்தி முடித்தனர். 

 

Thaipusam at Palani Murugan Temple ... The first festival held without devotees !!

 

பழனி கோவில் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்துள்ளனர். நேற்றைய  தினத்தில் சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் பலரும் நாளை சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வதற்காக மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகள், மடங்களில் தங்கியும் இருப்பதால் பழனி நகரமே முருக பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

13வது நோன்பு நாளில் சுடச்சுட ஆவி பறக்க தயாரான பிரியாணி

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Ready-to-eat Biryani to bake on the 13th day of Lent

ஏப்ரல் மாதம் ரம்ஜான் பண்டிகை வருவதையொட்டி உலகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து வருகின்றனர். சூரியன் உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு உண்ணாமல், நீர் அருந்தாமல் நோன்பு இருப்பர். மாலை 6 மணிக்கு மசூதிக்கு சென்று நமாஸ் செய்துவிட்டு உணவு உண்பார்கள். காலை 5 மணிக்கு முன்பாக உணவு உண்பதை நிறுத்திவிடுவர். நோன்பு காலத்தில் இயலாத மக்களுக்கு மதம் பார்க்காமல் உதவுவார்கள்.

வேலூர் கோட்டை எதிரே 400 கிலோ சிக்கன் கறி கொண்டு சுடச் சுட ஆவி பறக்க நோன்பு பிரியாணி தயார் செய்யப்பட்டது. வேலூர் மக்கான் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் பிரியாணி சமைத்து சுமார் 2000 வீட்டுக்கு பகிர்ந்து அளித்தனர்.

சனிக்கிழமை மாலை 5 மணியிலிருந்து பிரியாணி தயார் செய்யும் பணி தொடங்கிய நிலையில் நள்ளிரவு ஒரு மணி வரை பிரியாணி சமைக்கப்பட்டது. இந்தப் பணியில் சுமார் 130 பேர் ஈடுபட்ட நிலையில், மக்கான் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சுமார் அதிகாலை 2.30 மணிக்கு முன்பு பகிர்ந்தளிக்கப்பட்டது. ரம்ஜானை முன்னிட்டு 13 வது நோன்பு நாளில் அதிகாலையில் மக்கான் பகுதியில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர்.

Next Story

'பஞ்சாமிர்தத்தில் அரசியல்' - குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கோவில் நிர்வாகம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
 'Politics in Panjamirtham'-Temple administration responds to allegation

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தத்தை கோவில் நிர்வாகம் விற்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோயிலில் தொடர்ந்து சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகற்றப்பட்டதால் போராட்டம், நீதிமன்ற வழக்குகள் என அவ்வப்போது சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் காலாவதியான பஞ்சாமிர்தம், கோவில் நிர்வாகத்தாலே விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் மலை மீதுள்ள விற்பனை நிலையங்களில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவிலுக்கு சொந்தமான லாரியில் 30க்கும் மேற்பட்ட  கேன்களில் அடைத்து வைக்கப்பட்ட பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதனை பார்த்த ஒரு தரப்பினர் லாரியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்படுகிறதா? அல்லது வேறு இடங்களுக்கு பஞ்சாமிர்தம் கடத்தப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். உடனடியாக அங்கு வந்த அடிவாரம் காவல் நிலைய போலீசார், லாரியை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், 'விழாக் காலங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அதிகப்படியான பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் மீதமான காலாவதியான பஞ்சாமிர்தங்களை பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கக் கூடாது என்பதால் பெரிய கேன்களில் நிரப்பி அதை கோசாலைகளுக்கு எடுத்துச் சென்று அழிப்பது வழக்கமான நிகழ்வு. ஆனால் இதை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையற்ற சிலர், குறிப்பாக ஆக்கிரமிப்பு காரணத்தால் அகற்றப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.