ஜீவகாருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர்.

இந்த ஆண்டு 153 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நேற்று (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்பெருஞ்ஜோதி விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெற்றது . இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனத்தைக் கண்டு வழிபட்டனர்.

Advertisment