thaipusam festival government holiday tamilnadu cm order

Advertisment

இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளைப் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிப்பதுபோன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையைப் பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ஆம் நாள் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளைப் பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்'. இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.