ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் வருடந்தோறும் தைப்பூசத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதுபோல் இந்த ஆண்டும் தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இந்த தைப்பூசத் திருவிழாவின் போது பக்தர்கள் பாதயாத் திரையாக நடந்து வந்து முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். அதனாலேயே தமிழகத்தில் உள்ள காரைக்குடி தேவகோட்டை வேலூர் திருச்சி மதுரை தேனி பெரியகுளம் திருப்பூர் ஈரோடு பொள்ளாச்சி திண்டுக்கல் உள்பட தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களிலிருந்து இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகிறார்கள். இப்படி வரக்கூடிய பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, மலர் காவடி என பல்வேறு வகையான காவடிகளை சுமந்து ஆடிப்பாடி பாதயாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றன.

 Thaipoosam festival in Palani! Started with flagging !!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த அடுத்தாண்டு வருகிற 8ம் தேதி நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவையொட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடிகட்டி மண்டபத்தில் இன்று காலையில் செங்குந்த முதலியார்கள் பொது மண்டகப்படி சார்பில் கொடியேற்றம் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து 10 நாட்கள் தைப்பூச விழா நடைபெறும். இந்த விழாவையொட்டி நாள்தோறும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமி தங்கமயில் தங்கத்துரை வெள்ளி யானை வெள்ளி ஆட்டுக்கிடா வெள்ளி காமதேனு அந்தப்புரம் என பல்வேறு வகையான வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருகிறார்.

 Thaipoosam festival in Palani! Started with flagging !!

இந்த தைப்பூசத் திருவிழாவையொட்டி பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதையொட்டி பழனி அடிவாரம் கிரி வீதி மின் இழுவை ரயில் ரோப்கார் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து முருக பக்தர்கள் முருகனை தரிசனம் செய்கின்றனர் தைப்பூசத் தேரோட்டம் மற்றும் திருகல்யாணத்தை ஒட்டி மதுரை திருச்சி திருப்பூர் கோவை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பழனிக்கு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்க உள்ளது.அதேபோல் தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 12ஆம் தேதி வரை கோவை பழனி கோவை மார்க்கத்தில் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட உள்ளது.அதுபோல் தைப்பூசத் தேரோட்டம் அன்று மட்டும் மதுரை பழனி மதுரை மார்க்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த தைப்பூசத்தை முன்னிட்டு முருகப் பெருமானை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அனைத்து வசதிகளும் பழனி திருக்கோவில் சார்பில் செய்யப்ப ட்டு உள்ளது.