Skip to main content

தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

இன்று (24.01.2020) தை அமாவாசையை முன்னிட்டு, மூதாதையர்களின் ஆத்மா சாந்தியடைந்து, தங்களை ஆசிர்வதிக்கவேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாடி திதி தர்ப்பணம் செய்து வருவதால் கடற்கரையில் கூட்டம் அலைமோதி வருகின்றது.

thai amavasai rameshwaram temple peoples police protection increased

முன்னோர் வழிபாடு என்பது காலம் காலமாக தமிழனின் மரபில் உதித்த ஒன்று.! மதமாக பிரிவுப்பட்டாலும், இந்துக்கள் மட்டுமின்றி ஏனைய மதத்தாரும் விரும்பி பித்ரு தர்ப்பணம் செய்ய விரும்பும் நாட்களில் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை திதிகளே.! இந்நாட்களில் தங்களுடன் வாழ்ந்த மறைந்த மூதாதையர்கள் மற்றும் குலத்தின் மூதாதையர்களை எண்ணி அவர்களை நினைத்து நீர்நிலைகளில் திதி தர்ப்பணம் செய்து வழிபட்டால் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையும் அதே வேளையில், தங்களை ஆசிர்வாதம் செய்வார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.


இதன் காரணமாக 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றானதும், சக்தி பீடங்களில் ஒன்றானது ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் நீராடி, அங்கேயே தர்ப்பணம் செய்துவிட்டு ஸ்ரீ ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு நடத்த இந்தியா முழுவதும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கமான ஒன்று.

thai amavasai rameshwaram temple peoples police protection increased


இந்நிலையில், இன்று (24.01.2020) தை அமாவாசை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் அண்டை நாடான நேபாளத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தத்தில் குவிந்து தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் செய்து புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். அத்துடன் இல்லாமல் 22 புனித கிணறு தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்த்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 

thai amavasai rameshwaram temple peoples police protection increased


மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு தண்ணீர் வசதி மருத்துவ வசதிகள் செய்து கொடுக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகளை போக்குவரத்து துறையும், மதுரையிலிருந்து சிறப்பு ரயில் வசதியும் தென்னக ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்த, மாவட்ட காவல்துறையும் 500- க்கும் மேற்பட்ட போலீசாருடன் ராமேஸ்வரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தை அமாவாசை; புதுச்சேரி கடற்கரையில் குவிந்த பொதுமக்கள் 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

tai month new moon day people gathered on puducherry beach

 

சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையில் திதி கொடுப்பது வழக்கம்.

 

தை அமாவாசையான இன்று (21.01.2023) புதுச்சேரி கடற்கரையில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், மணக்குள விநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர் கோயில், கௌசிக பாலசுப்பிரமணியர்,  தண்டு முத்துமாரியம்மன், வரதராஜபெருமாள்,  உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டுவரப்பட்டன.

 

அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அங்கு திரளாக  சுவாமி தரிசனம் செய்தனர். புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.இதே போல, தை அமாவாசையை முன்னிட்டு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் நடந்தது. இதில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

 

 

Next Story

வன்முறை மூண்ட இடம் செல்ஃபி பாயிண்ட்டாக மாறியது! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

sri lanka incident selfie point peoples

 

இலங்கையில் வன்முறையைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கிற்கு இடையில் கொழும்பு காலிமுகத்திடலில்  மக்களின் அமைதி போராட்டம் தொடர்கிறது. இதேவேளையில், பிரதமர் அலுவலகத்தைப் போராட்டக்காரர்கள் சிலர் சூறையாடினர். 

 

நாட்டை நெருக்கடியில் தள்ளிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்துடன் கடந்த ஏப்ரல் 9- ஆம் தேதி முதல் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலால் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் அங்கு வன்முறை வெடித்தது. 

 

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கார்கள் கொளுத்தப்பட்டன. ராஜபக்சே பூர்வீக இல்லம் கொளுத்தப்பட்டது. ராஜபக்சே ஆதரவாளர்கள் வந்த பேருந்துகள் தீக்கு இரையாக்கப்பட்டன. இந்த இடம் தற்போது செல்ஃபி பாயிண்ட்டாக மாறியுள்ளது. 

 

மஹிந்த ராஜபக்சே பதவி விலக காரணமான, இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் புகைப்படமாகப் பதிவு செய்துக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரத்தில், இங்கு பலரையும் செல்போன் கையுமாகப் பார்க்க முடிகிறது. 

 

காலை 07.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், அத்தியாவசியப் பொருட்களை வாங்க மக்கள் வெளியே வந்தனர். பெட்ரோல், டீசலை வாங்கவும், உணவுப் பொருட்களை வாங்கவும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆயினும், கொழும்பு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவம் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. 

 

இதற்கிடையே, காலிமுகத்திடலில் அமைதி வழிபோராட்டம் நடத்துவோரைக் கலைக்க நீதிமன்றம் மூலம் காவல்துறை முயற்சிப்பதைக் கண்டித்து புதுக்கடை நீதிமன்றம் முன்பாக பொதுமக்கள் மவுனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.