ADVERTISEMENT

தாபா ஊழியர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு... போலீசார் விசாரணை!

05:37 PM Sep 25, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தாபாவிற்கு உணவு அருந்த சென்ற பட்டதாரி இளைஞருக்கும், உணவகத்தின் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பட்டதாரி இளைஞர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த நரேஷ் என்பவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணி அளவில் ஆரம்பாக்கத்தில் உள்ள தாபா ஒன்றில் உணவு அருந்த நரேஷ் சென்றுள்ளார். அப்பொழுது மொபைல் போனில் சார்ஜ் இல்லாததால் கடை ஊழியர்களிடம் தனது மொபைல் போனை கொடுத்து சார்ஜ் போட சொல்லியுள்ளார். உணவருந்தி விட்டு மீண்டும் வந்து பார்த்த பொழுது அவருடைய மொபைல் போனை தாபா ஊழியர் ஒருவர் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இதனை பார்த்த நரேஷ் அந்த ஊழியரிடம் எனது மொபைலை ஏன் பயன்படுத்தினீர்கள் எனக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக கடையின் உரிமையாளர்களுக்கும் நரேசிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. இதில் தாக்கப்பட்ட நரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அடுத்த நாள் உடலில் வலி ஏற்பட, அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே நரேஷ் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த நரேசின் குடும்பத்தினர் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் அந்த தாபாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT