tha

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புகளை விமர்சித்து பேட்டியளித்ததையடுத்து, தங்க தமிழ்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரி இந்த மனு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுக்கு அனுப்பப்பட்டது.

Advertisment

இந்நிலையில் அரசு தலைமை வழக்கறிஞரிடம் தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட போது கூட நீதிமன்றத்தை விமர்சிக்காமல் கண்ணியமாக நடந்து கொண்டதாகவும், அவர் வழிவந்த தான் நீதிமன்றத்தை விமர்சிப்பது தவறு என உணர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிடவும் கோரப்பட்டது.

Advertisment