Skip to main content

நலம் பெற்று வருகிறார் தோழர் தா.பாண்டியன்!

Published on 11/09/2018 | Edited on 12/09/2018
police

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அட்மிட்டானார். தா.பா.வுக்கு மூச்சு திணறலுடன் சளி தொந்தரவும் இருந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மார்பில் கோர்த்துள்ள சளியை அகற்றி வருகிறார்கள் மருத்துவர்கள். இன்று சிகிச்சையில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து வழக்கமான பணிகளை செய்கிறார். நலம் பெற்று வரும் தா.பா.வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என தோழர்கள் கூறுகிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நக்கீரன் ஆசிரியர்.. (படங்கள்)

Published on 26/02/2021 | Edited on 26/02/2021

 

கரோனாவிலிருந்து மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு காரணமாக, நேற்று முன்தினம் (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (26 பிப்.) காலமானார். சென்னை திருமங்கலம் அருகே உள்ள டிவிஎஸ் காலனியில், அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் மறைந்த தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

 

 

Next Story

’கலைஞரிடம் இயற்கை மன்றாடுகிறது’ - தா.பாண்டியன்

Published on 27/07/2018 | Edited on 27/07/2018
tha

 

திமுக தலைவர் கலைஞரின் உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அனைத்துக்கட்சி தலைவர்களும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கின்றனர்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பத்தரிகையாளர்கள் நக்கீரன் கோபால், கோவி.லெனின் உட்பட பலர் கோபாலபுரம் இல்லம் வருகை தந்து நலம் விசாரித்தனர்.

 

இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாஜக தமிழ்மாநிலதலைவர் தமிழிசை, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம்,  நடிகர்கள் ராதாரவி, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.

 


பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் தொலைபேசி மூலம் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் தொடர்புகொண்டு கலைஞரின் நலம் விசாரித்தனர்.

 

இந்நிலையில், சிபிஐ மூத்த தலைவர் தா.பாண்டியன் கலைஞரின் நலம் குறித்து நேரில் வந்து விசாரித்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  

‘’கலைஞர் உயிருக்காக மன்றாடவில்லை; அவரிடம் இயற்கை மன்றாடுகிறது.  தமிழக மக்கள் நெஞ்சில் கலைஞர் என்றும் நிலைத்திருப்பார்’’

என்று தெரிவித்தார்.