Advertisment

உயரும் நூல் விலை... வியாபாரிகள் கடையடைப்பு!

TEXTILE YARN PRICE RAISED ERODE TEXTILES OWNERS

ஈரோடு மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பிரதான தொழிலாக இருப்பது ஜவுளிதொழில்தான். இதற்கு அடிப்படை தேவையாக உள்ளது நூல்தான். அதன் விலை கடந்த ஆறு மாத காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு போல தொடர்ந்து 30% முதல் 40% உயர்ந்து விட்டது. இதனால் ஜவுளித் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, இந்த நூல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஜவுளித் தொழில் புரிவோர் மற்றும் வியாபாரம் செய்வோர் இன்று (18/03/2021) ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த கடையடைப்புப் போராட்டத்தால், சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், ஒரு நாள் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, கடந்த மாதத்தில் கடையடைப்பு நடத்த ஜவுளித் தொழில் நடத்தும் சங்கத்தினர் திட்டமிட்டிருந்தனர். இதனிடையே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், நல்ல சுமூகமான முறையில் முடிவு எடுத்துத் தருகிறோம் என அ.தி.மு.க.வினர் கூறியதால், கடையடைப்பு போராட்டத்தை ஒத்திவைத்தனர்.

Advertisment

ஆனால், இவர்களது கோரிக்கைகளை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால் அழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற வேண்டி, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜவுளி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

yarn textile shops Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe