2020 -21 கல்வியாண்டிற்காக இலவசப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. சென்னை, சிந்தாதிரிப்பேட்டை கல்யாண் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த இலவசப் புத்தகங்கங்கள் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இன்று (15.07.2020) எழும்பூர் மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்துஅரசுப் பள்ளிகளிலிலும்பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கிச்சென்றனர்.