Advertisment

சட்டப்பேரவையில் கலைஞர் புகைப்படத்தில் இடம்பிடித்துள்ள வாசகம்!

ரகத

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கலைஞரின் திருவுருவப் படத்தை சட்டப்பேரவையில் இன்று திறந்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisment

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர், "வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. தமிழகத்தில் பல வரலாற்றுச் சம்பவங்கள் நடைபெற இந்த பேரவை காரணமாக இருந்திருக்கிறது. தமிழக மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் கலைஞர்" என்றார். பேரவையில் திறக்கப்பட்ட கலைஞர் புகைப்படத்தின் பின்புறம் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. மேலும், புகைப்படத்தின் கீழே "காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

Advertisment

kalaingar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe