Advertisment

கரோனா தொற்று!!! அதே தெருவில் வசிக்கும் அனைவருக்கும் பரிசோதனை (படங்கள்)

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தோர், அவர்களுடன் பயணம் செய்தவர்கள் என அனைவரது விவரங்களையும் சேகரித்து, அவர்களையும் தனிமைப்படுத்தும் பணியை அரசு செய்துவருகிறது. அத்துடன் அவர்கள் வசிக்கும் பகுதிகள், அவர்கள் வேலை பார்த்த இடங்கள் அனைத்தையும் தனிமைப்படுத்தி, அவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

Advertisment

சென்னையில் அதிகபட்சமாக 163 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில்,அவர்கள் வசிக்கும் பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (10.04.2020) புதுப்பேட்டை பகுதியில் கரோனா பாதிப்பு உள்ளவர்கள் வசிக்கும் பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. மேலும், அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா சோதனை நடத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

Advertisment

corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe