/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high_12.jpg)
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த நந்தகிஷோர் சந்தக் என்பவர் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகப்போலீசில் புகார் அளித்திருந்தார். ஆனால் இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நந்தகிஷோர் சந்தக் கொலை செய்யப்பட்டு விட்டதாக வழக்கு பதிந்துள்ளனர். இது தொடர்பாக ராதேஷ் சியாம் சந்தக் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது இந்த வழக்கில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நந்தகிஷோர் சந்தக் என்பவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தவறாக வழக்குப் பதிவு செய்த போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி கீழமை நீதிமன்ற நீதிபதி இயந்திரத்தனமாகச் செயல்பட்டுள்ளதாகத்தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இறந்தவரை நேரில் பார்க்கப் பயமாக உள்ளது.கொஞ்சம் முன்னால் வாருங்கள், உங்கள் கால்களைப் பார்த்துக் கொள்கிறேன் என நீதிபதி நகைச்சுவை செய்திருந்தார். இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)