Advertisment

டிரைவர் வீட்டின் முன்பு குண்டு வீச்சு; தேடும் பணியில் தனிப்படையினர்!

Bomb blast in front of driver's house

அரியலூர் புதுச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் அபிபுல்லா. இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். மூன்றாவது மகளுடன் மனைவியும் தானும் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அபிபுல்லா ஜெயங்கொண்டத்தில் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

Advertisment

நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டு முன்பு 'டமார்' என்று சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அபிபுல்லா மற்றும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டுத்தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து அபிபுல்லா காவல்துறைக்குத்தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசி விட்டுத்தப்பிச் சென்றவர்களைத்தேடிப் பிடிக்கும் பணியில் தனிப்படை அமைத்துத்தேடி வருகிறார்கள்.

Advertisment

Ariyalur bomb blast incident
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe