Advertisment

கயிறு திரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து; ரூ. 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

Terrible fire at a twine mill; Goods worth 30 lakhs were burnt and damaged

கோப்புப்படம்

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு அருகே உள்ள வடுகனூரில் கடந்த 5 வருடங்களாக நிலத்தை குத்தகைக்கு எடுத்து கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அருகிலேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று நள்ளிரவில் திடீரென தேங்காய் நார்களில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் ஆலை முழுவதும் மளமளவென தீப்பிடிக்கத்தொடங்கி கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

Advertisment

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். தீ வேகமாகப்பரவியதை அடுத்து தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை முழுவதும் அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கயிறு ஆலையில் இருந்த சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நார்ப்பொருட்கள், டிராக்டர் இயந்திரங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு வந்த சிவகிரி போலீசார் தீ விபத்து சம்பந்தமாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

Advertisment

police Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe