A terrible fire in a private commercial complex

சென்னை அமைந்தகரை - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் நேற்று (19-02-24) இரவு 9:30 மணி போல் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அந்த பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்தது. இதனையடுத்து, அங்குள்ள பொதுமக்கள் காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Advertisment

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வணிக வளாகத்தில் ஏற்பட்டிருந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

Advertisment

மேலும், இந்த சம்பவம் குறித்து அமைந்தகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.