A terrible fire in a jewelry box factory

Advertisment

கோவை மாவட்டம், மதுக்கரை அறிவொளி நகர்ப் பகுதியில், தங்க நகைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆலையில் இன்று (08-02-24) திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த பயங்கர தீ விபத்தால், இந்த ஆலை முழுவதும் சேதம் அடைந்தது.

ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அங்குள்ள தொழிலாளர்கள் அந்த ஆலையை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால், எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாகத்தீயணைப்புத்துறையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த கோவை புதூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகுதீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகத்தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், விபத்தின் போது சமையல் சிலிண்டர் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.