Terrible explosion in Kalquari near Kariyapatti

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழஉப்பிலுகுண்டு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டபோது, வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகமுதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்த வெடி விபத்தில் பலர் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கல்குவாரியை மூட வேண்டும் என்று அப்பகுதியில் மக்கள் மதுரை, தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.