Advertisment

பெரம்பலூரில் பயங்கர விபத்து.. தீப்பிடித்து எரிந்த வாகனங்கள்..! 

Terrible accident in Perambalur .. Vehicles caught on fire ..!

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் - கார் மோதிக்கொண்ட விபத்தில் இரு வாகனமும் தீப்பிடித்து எரிந்தன. திருச்சி -கரூர் பைபாஸ் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் புனிதன். இவரும் இவரது மனைவி ஷீலாவும் சென்னையிலிருந்து திருச்சிக்கு நேற்று (01.08.2021) மாலை காரில் வந்துகொண்டிருந்தனர். காரை திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த இளம்பரிதி என்பவர் ஓட்டிவந்தார். பெரம்பலூர் அருகே காரை பிரிவு ரோடு அருகே கார் வந்துகொண்டிருந்தபோது, கிராமத்து சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றார்.

Advertisment

அப்போது டூ வீலரும் காரும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இரண்டுமே திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. காரில் இருந்தவர்கள் உடனடியாக இறங்கி தப்பி ஓடிவிட்டனர். டூவீலரில் வந்த பெரியசாமி என்ற 60 வயது முதியவர், அவரது பேரன்கள் அஜய் (6), பரணி (3) ஆகியோர் காயமடைந்தனர். மூவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சேர்க்கப்பட்டனர். அங்கு பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இரு சிறுவர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இருசக்கர வாகனமும், காரும் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். காரும் டூவீலரும் முற்றிலும் எரிந்து சேதமானது.

Advertisment

Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe