Term extension to the aarmugasami Commission- tngovt

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஆறுமுகசாமி ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று ஆணையத்தின் விசாரணை காலத்தை மேலும் 4 மாதம் நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.மறைவை தொடர்ந்து அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக சர்ச்சைகள் எழ, அது குறித்துவிசாரணை செய்ய ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில்நேற்றைய தினமே விசாரணை ஆணையம் முடிவு பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துணைமுதல்வர் உட்பட இன்னும் பல முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால். மேலும் இறுதிக்கட்ட பணிகள் முடிக்க இன்னும் நாட்கள் தேவைப்படும் என ஆணையம் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெ.மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு நான்கு மாதங்கள் காலநீட்டிப்புஅவகாசத்தை தமிழக அரசு வழங்கியுள்ளது.