Advertisment

'மேடையில் டென்ஷன்'-நிர்வாகிக்கு பளார் விட்ட ராஜேந்திர பாலாஜி

'Tension on stage' - Rajendra Balaji gives a shout-out to the manager

நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கைகலப்பு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கூட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரை ராஜேந்திர பாலாஜி 'பளார்' என அரை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்பொழுது அதிமுக நிர்வாகிகள் அவருக்கு பொன்னாடை அணிவிக்க மேடைக்கு முண்டியடித்தனர். வரிசையில் வராமல் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார்ரை எழுந்து நின்று 'பளார்' என கன்னத்தில் அறைந்தார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
admk Virudhunagar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe