Skip to main content

திமுக வேட்பாளரின் கணவர் கன்னத்தில் பளார்! -காவல்துறையினர் கண்முன்னே ஆளும்கட்சியினர் டென்ஷன்!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

Tension of the ruling party before the eyes of the police!

 

வேட்புமனு பரிசீலனை நாளில் வேட்பாளரிலிருந்து காவல்துறையினர் வரை அனைவரும் டென்ஷனாகவே இருப்பார்கள். சிவகாசி மாநகராட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல.  

 

சிவகாசி மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்களை   இன்று சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பரிசீலித்தனர். பரிசீலனை நடைபெறும் இடத்துக்கு வேட்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், திருத்தங்கல் 20-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்மாடத்தியின் கணவர் கருப்பசாமி, திருத்தங்கல் நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் உள்ளிட்ட ஆளும்கட்சி நிர்வாகிகள் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் இடத்தை நோக்கி முன்னேறினர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த சிவகாசி டவுண் இன்ஸ்பெக்டர் சுபக்குமார் உள்ளிட்ட காவல்துறையினரிடம் உதயசூரியனும் கருப்பசாமியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இன்ஸ்பெக்டர் சுபக்குமார்  ‘வேட்பாளர்களை மட்டுமே அனுமதிப்போம்..’ என்று கூற, வாக்குவாதம் தொடர்ந்தது.

 

இன்ஸ்பெக்டர் சுபக்குமாரிடம் உதயசூரியன் “நீங்கதான் கையைத் தள்ளிவிட்டீங்கள்ல. உங்ககிட்ட என்ன பேச வேண்டியது இருக்கு? போங்க சார் நீங்க!” என்று குரலை உயர்த்திப் பேச, சுபக்குமாரோ “நான் தள்ளிவிடல..” என்று மறுத்தார். அப்போது கருப்பசாமி ஏதோ சொல்ல, ‘பளார் பளார்’ என்று அவருடைய கன்னத்தில் மாறிமாறி அறைவிட்ட உதயசூரியன், “நான்தான் பேசிட்டு இருக்கேன்ல. நீ ஏன் பேசுற?” என்று எகிறினார். அப்போது கட்சி நிர்வாகிகளில் ஒருவர் “காலைல இருந்து நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு..” என்று அங்கலாய்த்தார். நடந்தை கவனித்த  இன்ஸ்பெக்டர் சுபக்குமாரோ, “நீங்க டென்ஷன் ஆகி எங்கள ஏன் டென்ஷன் ஆக்குறீங்க?” என்று புலம்பினார்.  

 

தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ள 20-வது வார்டில் போட்டியிடும் பொன்மாடத்தியின் கணவர் கருப்பசாமியை, இன்னொரு சமுதாயத்தவரான உதயசூரியன் அடித்ததால், இச்சம்பவம் சாதி ரீதியான விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.