Skip to main content

மாணவியின் நம்பிக்கையைக் காப்பாற்றிய முதல்வர்; நன்றி தெரிவித்த மாணவி

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

tenkasi school student letter to tamilnadu cm stalin 

 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஆராதனா, தன் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் தற்போது இருக்கும் வகுப்பறைகளில் இட நெருக்கடியாக உள்ளது. எனவே, தங்களது பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தர உதவ வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

 

தென்காசி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கச் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் பேசும் போது, தன்னுடைய பள்ளிக்கு உதவி கேட்டு மாணவி தனக்கு எழுதிய கடிதத்தைப் பற்றி தெரிவித்த முதல்வர், உடனடியாக வகுப்பறைகள் கட்ட ரூ. 35.50 லட்சம் ஒதுக்கி அனுமதியளித்தார். ‘எத்தனை நம்பிக்கையை அந்த மாணவி என் மீது வைத்திருந்தால்... முதல்வருக்கு கடிதம் எழுதினால் நிறைவேற்றுவார் என்று எழுதிய அந்த மாணவியை நான் பாராட்டுகிறேன்’ என்று முதல்வர் அந்த மாணவியை வாழ்த்தினார்.

 

tenkasi school student letter to tamilnadu cm stalin 

 

இந்நிலையில், தான் எழுதிய கடிதம் மூலம் பள்ளியின் குறையைத் தீர்த்து வைத்த முதல்வருக்கு மாணவி நன்றிக்கடிதம் எழுதியிருக்கிறார். ‘எங்கள் பள்ளிக்கு உதவிய முதல்வருக்கு  நன்றி. நான் தென்காசி கூட்டத்தில் உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை. உங்களை நேரில் பார்க்க ஆவலாக உள்ளேன்.’ என்று தன் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அவரை நாம் சந்தித்த போது, முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கடிதம் எழுதிய மாணவி ஆராதனாவும் அவரது தந்தை தங்கராஜும் தெரிவித்தனர். மேலும், ஊரில் உள்ளவர்களும் தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

 

இது குறித்து தர்மராஜ் பேசும் போது , “6 வகுப்பறைகள் கட்ட முதல்வர் அனுமதி கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே பள்ளி குளக்கரையின் அருகில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி மாணவர்களுக்கு சிரமமாகிவிடும். இதனால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கல்வித்துறை மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இதுகுறித்த விபரத்தைச் சொன்னோம். அவர்களும் ஏற்றுக்கொண்டனர். கலெக்டரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். தண்ணீர் இல்லாத இடத்தில் கட்டலாம் என்றனர். பக்கத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான 4.76 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தில் வகுப்பறைகளைக் கட்ட அரசு உதவ வேண்டும். மேலும், இட நெருக்கடியால் ’இ-சேவை’ மையத்தில் ஒரு வகுப்பு செயல்படுகிறது.” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.