/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01 art 108 ambulance_1.jpg)
கொதிக்கும் சாம்பாரில் தவறிவிழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் நாட்டாண்மை தெருவைச் சேர்ந்தவர் சிவன் மாரி. ராணுவ வீரரானஇவருக்கு கலா என்ற மனைவியும், முகேஷ் (வயது 8) மற்றும் இஷாந்த் (வயது 5) என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிவன் மாரி ஏழை மாணவர்களுக்காக ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்திற்கு சிவன் மாரி தனது குடும்பத்தினருடன் கடந்த 3 ஆம் தேதி சென்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிவன் மாரியின் இளைய மகன் இஷாந்த் மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த கொதிக்கும் சாம்பார் இருந்த பாத்திரத்திற்குள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த இஷாந்தை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் இஷாந்த் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us