tenkasi district Wolves animals peoples forest officers

Advertisment

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக- கேரள எல்லைப் பகுதிகளான தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் ஓநாய்த்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்மலை அனாமாபவனைச் சேர்ந்த அனிஸ் என்பவர் தென்மாலா சந்தி அருகேயுள்ள தனது கடையில் நேற்று முன்தினம் (25/06/2020) காலை தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஓநாய், அவரது காலை கடித்தது.

இதையடுத்து தப்பிச்சென்ற அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோட்டாரக்கார தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் மேலும் சிலரை கடித்துக் காயப்படுத்தியது. மேலும் தென்மலையைச் சேர்ந்த சஜி என்பவரது ஆட்டுத் தொழுவத்தில் புகுந்த ஓநாய் ஆடுகளைக் கடித்தது. இதனால் ஆடுகள் அலறுவதைக்கேட்டு அங்குச் சென்ற சஜி, ஓநாயை விரட்டினார். இந்நிலையில் நேற்று முன்தினம் (25/06/2020) நண்பகல் தென்மலை டிப்போ பகுதிக்குச் சென்ற ஓநாயைப் பிடிக்க அதன் அருகிலும், ரியல் எஸ்டேட் பகுதியிலும் இரும்புக் கூண்டு வைத்துள்ளனர்.

tenkasi district Wolves animals peoples forest officers

Advertisment

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் எரியப்பாவ் மற்றும் தென்மாலா டிப்போ அருகே புகுந்த இரு ஓநாய்கள் அங்குள்ள மக்களைத் தாக்கியது. மேலும் தென்மாலா ரியல் எஸ்டேட் தொழிலாளர்களையும் விரட்டிச் சென்றது. இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஓநாய்த் தொல்லையால் அவதிப்படும் மக்கள், இதற்கு நிரந்தர தீர்வு காண கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் எடப்பாளையம் பகுதியில் ஒருவரது காலை கடித்த ஓநாயை ஆரியங்காவு வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.