Advertisment

தென்காசியில் உபா சட்டத்தில் மேலும் ஒருவர் கைது!

தென்காசி மாவட்டம் தென்காசியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிலர் குழுக்களாக இணைந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடும் நோக்கத்தில் சதி திட்டம் தீட்டியதாக கடந்த மாதம் 20ம் தேதி 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மேலும் பலரை போலீசார் தேடி வந்தனர்.

Advertisment

tenkasi district upa act uapa act arrest one person

அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆறாவதாக திருவனந்தபுரம் அருகே உள்ள பாறசாலையை சேர்ந்த பஷீர் என்பவரது மகன் சையத் அலி (27) என்பவரை தென்காசி போலீசார் இன்று (10.02.2020) கைது செய்தனர்.

Advertisment

சையது அலி திருவனந்தபுரத்தில் வழிபாட்டு தளம் ஒன்றில் பதுங்கி இருந்தபோது கேரளா மற்றும் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு கன்னியாகுமரி கொண்டு வரப்பட்டார். அங்கு மேற்கொண்ட விசாரணையை அடுத்து தென்காசி கொண்டு வரப்பட்டு தென்காசியில் உபா சட்டத்தின் கீழ் கைதானார்.

police tenkasi district UAPA ACT
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe