காவல் நிலையம் முன்பு பெண்ணுக்கு அரிவாள் வெட்டு  காவலர் சரண்!

தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தின் முன்பு வசிப்பவர் முப்பிடாதி என்ற பெண். கணவர் விலகிச் சென்றதால் தனியே இருப்பவர். அது சமயம் ஆழ்வார்குறிச்சியில் போலீஸ்கான்ஸ்டபிளாகபணி புரிந்த தட்சணாமூர்த்தி என்பவருக்கும் முப்பிடாதிக்கும், கடந்த சில வருடங்களாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது.

tenkasi district police station opposite incidents women with police

இந்நிலையில் தட்சிணாமூர்த்தி வீரவநல்லூர் காவல் நிலையத்திற்கு மாறுதலாகிச் சென்று விட்டார். இன்று (08.12.2019) அவர் கடையத்தில் முப்பிடாதியைச் சந்தித்திருக்கிறார். அவர்களுக்குள் திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே இரவு சுமார் ஏழரை மணியளவில் கடையம் காவல் நிலையம் எதிரே முப்பிடாதியை தட்சிணாமூர்த்தி ஆத்திரத்தோடு கத்தியால் அவளது கழுத்து காது ஆகியவைகளில் குத்தி விட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

படுகாயமடைந்த முப்பிடாதியை பெண் ஆய்வாளர் ஆதிலட்சுமி மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர். மேல் விசாரணை நடத்தி வருகிறார். முப்பிடாதிக்கும் அவரது கணவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஆன நிலையில், காவலர் தட்சணாமூர்த்தி முப்பிடாதியோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்போது முப்பிடாதிக்கும் வேறு ஒரு ஆண் நண்பருக்கும் உறவு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த தட்சணாமூர்த்தி முப்பிடாதியை வெட்டியுள்ளார். காவல் நிலையம் முன்பு காவலர் ஒருவர் பெண்ணை வெட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

incident Police investigation tenkasi district Women
இதையும் படியுங்கள்
Subscribe