Advertisment

குளத்தில் மூழ்கி மூவர் பலி!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரது மனைவி இந்திரா (வயது 34). இவரது மகள் சுமித்ரா (வயது 13), அதே பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய மனைவி அனந்தம்மாள் செல்வி (வயது 43) ஆகியோர் இன்று (05.01.2020) காலை பனையூர் பெரியகுளம் குளிக்கச் சென்றனர்.

Advertisment

tenkasi district incident police investigation

இந்நிலையில் பனையூர் பக்கமுள்ள புதுக்குளத்தில் அதிகமாகத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. நீச்சல் தெரியாத இவர்கள் மூவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் சேற்றில் சிக்கித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூவர் உடல்களையும் கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

police incident sankarankovil tenkasi district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe