Advertisment

தென்காசி, செங்கல்பட்டு... உதயமாகிறது புதிய மாவட்டங்கள்!!

நெல்லையை பிரித்து தென்காசியை தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனிமாவட்டமாகவும் சட்டசபையில் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Advertisment

new district

இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் பல்வேறுபுதிய அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்துதனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டை தனி மாவட்டமாகவும் அறிவித்துள்ளார்.

Advertisment

ஏற்கனவே தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் 33 ஆவது மாவட்டமாகவிழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி என தனி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தென்காசி, செங்கல்பட்டு என இன்னும் இரண்டு புதிய மாவட்டங்கள் உதயமாக உள்ளன. இதனால் தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் விரைவில் கும்பகோணமும் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Chengalpattu District Tamilnadu thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe