ADVERTISEMENT

எம்.எல்.ஏவுக்கு கண்டனம்... தென்காசியில் கிளம்பும் போஸ்டர்கள்!

02:22 PM Dec 25, 2019 | santhoshb@nakk…

தென்காசி மாவட்டம் உதயமானதையடுத்து பரபரப்பான தகவலை வெளியிட்ட தென்காசி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான செல்வமோகன்தாஸ் பாண்டியன், தென்காசி மாநகராட்சியாகத் தரம் உயர்த்துவதற்கு முதல்வர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதுகுறித்து தென்காசி நகர தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ.வின் அறிவிக்கைக்குக் கண்டனப் போஸ்டர்கள் நகரில் ஒட்டப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதுகுறித்து நகர தி.மு.க. செயலாளரான சாதிரிடம் பேசினோம். சட்டமன்ற உறுப்பினர் விபரம் தெரியாமல் நகர மக்களின் கலெக்டர் அலுவலகப் பிரச்சினையைச் சமாளிக்க முடியாமல் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT


மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நகராட்சி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. மாநகராட்சியாகத் தரம் மேம்பட வேண்டுமென்றால் தேர்வு நிலை நகராட்சியாகி, பின்பு சிறப்பு நிலை நகராட்சியானால் தான் மாநகராட்சியாக முடியும். அதற்கு நகராட்சியின் வருமானம் 50 கோடியாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நகராட்சியின் வருமானம் 5- 7 கோடியாக உள்ளது. மேலும் மக்கள் தொகை 4 லட்சம் கொண்டதாக இருக்க வேண்டும். அது தென்காசி சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள மக்கள் தொகையின் அளவைவிட கூடுதல் என்பதே உண்மை. பிறகு எப்படி தென்காசி மாநகராட்சியாக அமைக்க முடியும் என பல்வேறு காரணங்களை அடுக்கியவர் மக்களின் விவகாரங்களைத் திசை திருப்பவே இது போன்று அறிக்கை வெளியிடுகிறார் என்றார். விவாதமாகிக் கொண்டிருக்கிறது இந்த விவகாரம்.



Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT