Skip to main content

தைப்பொங்கல் இலவச வேட்டி சேலைக்கான டெண்டர் அறிவிப்பு

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

pongal

 

தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்பட்டும் இலவச வேட்டி சேலைக்கான டெண்டர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 தமிழகத்தில் 2.15 கோடிக்கும் அதிகமான குடும்ப அரிசி அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளின் போது தமிழக அரசின் சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். வருடந்தோறும் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலையும் வழங்கப்படும். 2023ம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு வேட்டி சேலை வழங்குவதற்கு நூல் வாங்குவதற்கான டெண்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  

 

இதன்படி, 1683 டன் நூல் கொள்முதலுக்கான  டெண்டரை  தமிழக அரசின் கைத்தறித்துறை வெளியிட்டுள்ளது. டெண்டர் கோருவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 9ம் தேதி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நூல் கொள்முதல் செய்யப்பட்டு அவை தமிழகம் எங்குமுள்ள நெசவாளர்களிடம் வழங்கப்படும். இதன் மூலம் 15000 கைத்தறி நெசவாளர்களுக்கு 54000 விசைத்தறி நெசவாளர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்