Skip to main content

டென்டரில் கோடிக்கணக்கில் சுருட்டிய எஸ்.பி.வேலுமணி பினாமிகள்!-அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் புகார்!!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

 

arappor iyakkam

 

அறப்போர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் " லஞ்ச ஒழிப்பு துறைக்கு இன்று கொடுப்பட்டுள்ள  புகாரில் அமைச்சர்  எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனங்களுக்கு கோவை மற்றும் சென்னை மாநகராட்சியில் அதிக டென்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  2014 ஜூன் முதல் 2015 நவம்பர் வரை கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சுற்று சுவர் அமைத்தல், குடிநீர் குழாய் பதித்தல், போன்றவைகளுக்காக கிட்டத்தட்ட 19 டென்டர்கள் விடப்பட்டது. அந்த 19 டென்டர்களுக்கும் மொத்தம் மதிப்பு  கிட்டத்தட்ட 6 கொடியே 50 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் என்றும். இந்த 19 டெண்டர்களில் அதிகபட்ச டென்டர்கள் கே.சந்திரபிரகாஷ் என்பவரின் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட் என்ற எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த டெண்டர் கோருபவர்களில் கே.சந்திரசேகர், ராபர்ட் ராஜா என்ற இருவர்கள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறார்கள். இந்த இரண்டு பேரில் யாரேனும் ஒருவருக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஜூன் 2014-லிருந்து நவம்பர் 2015 வரை  அந்த கால இடைவெளியில் மொத்தம் 38 டென்டர்கள் கோரப்பட்டுள்ளது. இந்த டென்டர்களும் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் என்ற எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனமும், கே.சந்திரபிரகாஷின் கே.சி.பி எஞ்சினியர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் மட்டுமே பங்கு பெற்று இருக்கிறது. அதிலும் வரதன்  இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் நிறுவனத்திற்கு  அதிக டெண்டர்களை கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2015 ஜனவரி முதல் அக்டோபர் வரை கோவை மாநகராட்சியில் கிட்டத்தட்ட 131 டென்டர்களில்  கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட் நிறுவனத்திற்கு அதிகபட்ச டென்டர்களை கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் எஸ்.பி பில்டர்ஸ் எனப்படும் எஸ்.பி மணியின் பினாமி நிறுவனங்களே டென்டர் கோருதலில் இடம் பெற்று இருக்கிறது. இந்த 131 டென்டர்களின் மொத்த மதிப்பு 52 கொடியே  99லட்சத்து  31 ஆயிரம் ரூபாய் ஆகும்.

 

arappor iyakkam

 

அதேபோல் சென்னை மாநகராட்சியில் ஜனவரி 2018 முதல் மே 2018 வரை விடுக்கப்பட்ட டென்டர்களில் அர்பன் கம்யூனிட்டி ஹெல்ப் சென்டர் யு.பி.ஹெச்.சி எனப்படும் பணிசேவை தொடர்பான டென்டர்களிலும் எஸ்.பி வேலுமணியின் வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் நிறுவனத்திற்கே டென்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த  டென்டர்களிலும் கிட்டத்தட்ட 14 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மொத்த டென்டர்களில் 88 சதவிகிதம்  வரதன் இன்ஃப்ராஸ்ட்ரக்ஜர் எனும் எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனத்திற்கு சென்று சேர்ந்துள்ளது.மேலும் இந்த டென்டர்களில் கே.சி.பி என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிட்டேட், வரதன்  இன்ஃப்ரா ஸ்ட்ரக்ஜர், எஸ்.பி பில்டர்ஸ் நிறுவனங்களுக்கும் டென்டர் தரவேண்டும் என்பதற்காகவே  சில நிபந்தனைகளும் மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது ஒரு டென்டர் கோரும் நிறுவனத்தின் கடைசி மூன்றாண்டின் நிதிநிலையை டென்டர் விதிமுறை பொறுத்தே கவனத்திற்கு  டென்டர் கொடுக்கப்படும் . ஆனால் இது போன்ற விதிமுறைகளை தங்கள் வசதிக்காக மாற்றியமைத்து அந்த நிறுவனங்களுக்கு டென்டர்கள் கிடைக்க முறைகேடுகள் நடந்துள்ளதாக  கூறப்படுகிறது. 

 

இதன் மூலம் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாயை எஸ்.பி வேலுமணியின் பினாமி நிறுவனம் சம்பாரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி தொகுதி அதிமுக சீட் யாருக்கு? - உச்சத்தில் விஜயபாஸ்கர் - தங்கமணி மோதல்!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

Trichy Constituency ADMK seat for whom? Vijayabaskar - Thangamani conflict at the peak!

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தொகுதி யாருக்கு என்ற முட்டல் மோதல்கள் பலமாக உள்ளதாம். தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்கம் ஆர்.வி. பரதன், தனக்கு திருச்சி அல்லது பெரம்பலூர் தொகுதி கொடுத்தால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் ஆட்கள் கட்சிக்காக வேலை செய்வார்கள் என்று எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கையோடு போக, திருச்சி தொகுதிப் பொறுப்பாளரான மாஜி தங்கமணியும் ஆமோதித்துள்ளார். ஆனால் திருச்சி தொகுதியை கறம்பக்குடி குளந்திரான்பட்டு மணல் கரிகாலனின் சகோதரரான புதுக்கோட்டை மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையாவுக்கே கொடுக்க வேண்டும் என்று புதுக்கோட்டை வடக்கு மா.செ. விஜயபாஸ்கர் மதியம் வரை எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான், திருச்சியை தங்கள் கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு ஒதுக்குவது வரை போன எடப்பாடி, தேமுதிகவுக்கு தஞ்சை தொகுதியை கொடுத்துவிட்டு திருச்சியை நிலுவையில் வைத்துள்ளார். தொகுதிப் பொறுப்பாளரான தான் பரிந்துரை செய்த வேட்பாளருக்கு சீட் கிடைக்கவிடாமல் தான் பரிந்துரைக்கும் பாசறை கருப்பையாவுக்கு சீட் வாங்க மோதும் விராலிமலை விஜயபாஸ்கரிடம், உங்கள் பொறுப்பு தொகுதியை மட்டும் கவனியுங்கள். என் பொறுப்பு தொகுதிக்குள் வரவேண்டாம் என்று தங்கமணி விராலிமலை விஜயபாஸ்கரிடம் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருச்சி தொகுதி சீட்டுக்காக அதிமுக மாஜிக்களின் மோதல்கள் உச்சத்தில் இருப்பதால் விடியும்போது சீட் யாருக்கு என்று முடிவெடுப்பார் எடப்பாடி என்கிறார்கள் விவரமறிந்த ர.ர.க்கள். பரதனிடம் பேசிய எடப்பாடி, நாளைய விடியல் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கை கூறி இருப்பதாகவும் பேசுகின்றனர். அதே நேரத்தில் மா.செ. விஜயபாஸ்கர், சீட் எனக்குத்தான் வாங்கித் தருவார் நான் தான் வேட்பாளர் என்று கட்சியினரிடம் சொல்லி வாழ்த்துகளையும் பெற்று வருகிறார் பாசறை கருப்பையா.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.