500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரியுள்ளது. சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கு இந்த மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதாவது குளிர்சாதன வசதி இல்லாதது, குளிர்சாதன வசதி உள்ளது என இரு வகையான பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக இந்த மின்சார தாழ்தள பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. ஏற்கனவே சென்னை மாநகரில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 500 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.