Skip to main content

பத்தாயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ள பலே ஒப்பந்தகாரர்!- பந்தாடப்படும் அதிகாரிகள்! 

Published on 08/12/2019 | Edited on 08/12/2019

“சில விவகாரங்களை காலப்போக்கில் மக்கள் மறந்துவிடுகிறார்கள். அநீதி இழைப்போருக்கு அதுதான் வசதியாகி விடுகிறது. அந்த விவகாரமோ நீடித்த படியேதான் இருக்கும். அப்படி ஒரு விவகாரம்தான் இது. அந்த நபர் தற்போது யார் யாருக்கு பினாமியாக இருக்கிறாரோ, தெரியவில்லை. உலகம் முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சொத்துகள் சேர்த்திருக்கிறார்.   

ten thousands crores contractor virudhunagar district aruppukkottai

‘சென்ட்ரலில் இருந்து ஸ்டேட் வரைக்கும், அட அமலாக்கத்துறையே என் பாக்கெட்டில்தான் இருக்கிறது.’ என்று தமிழகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் கூவி வருகிறார். ஒன்றரை வருடங்களுக்கு முன், சென்னை, மதுரை,  அருப்புக்கோட்டை என 30 இடங்களில்‘ஆபரேஷன் பார்க்கிங்’என்ற பெயரில் சோதனை நடத்தி,  ரூ.163 கோடி ரொக்கப் பணம், 150 கிலோ தங்கமெல்லாம் வருமான வரித்துறையிடம் சிக்கியது. மு.க.ஸ்டாலின் கூட ‘முதலமைச்சரின் துறையான நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தகாரர் செய்யாதுரை, நாகராஜனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடந்தனவே? இதுவரை பொதுமக்களின் கவனத்தில் வெளிச்சம் பாய்ச்சிடத் தக்க உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லையே?’என்று கேள்வி எழுப்பினார். அதே நாகராஜ்தான், பரமசிவன் கழுத்து பாம்பாக அதிகாரிகள் மட்டத்தில் சீறி வருகிறார்.”  

நாகராஜ்-

ten thousands crores contractor virudhunagar district aruppukkottai



தென் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நேர்மையான உயரதிகாரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த  செய்யாதுரை மற்றும் அவருடைய மகன் நாகராஜ் நடத்திவரும் எஸ்.பி.கே. நிறுவனத்தின் இன்றைய அடாவடி நடவடிக்கைகள் குறித்து ஆதங்கப்பட்டார். சிவகாசியைச் சேர்ந்த சமுதாய பிரமுகர் ஒருவரும்  அவரோடு சேர்ந்துகொள்ள, குமுறி தீர்த்துவிட்டனர். 
 

“சிவகாசியின் இதயமான பகுதியில் உள்ள சேர்மன் சண்முகம் நாடார் சாலையில் ஐந்து தனியார் பள்ளிகள் உள்ளன. சுமார் 8000 மாணவர்கள் படித்து வருகின்றனர். சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அந்த வழியாகத்தான் பேருந்துகள் செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த அந்த ரோடு குண்டும் குழியுமாக இருந்தும், சாலை சீரமைக்கும் பணியை கிடப்பில் போட்டுவிட்டார்கள். அதனால், பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, பொது மக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அரசாங்கத்தை ஊரே கரித்துக்கொட்டுகிறது. ஏன் இந்த நிலை தெரியுமா? விருதுநகர் மாவட்டத்தில் சாலை சீரமைக்கும் பணியை பத்து ஒப்பந்தகாரர்களிடம் பிரித்துக்கொடுத்திருந்தால் வேலை வேகமாக நடந்திருக்கும். ஆனால், மொத்த பணியையும் ஒரே ஒப்பந்தகாரரிடம் கொடுத்துவிட்டார்கள். எஸ்.பி.கே நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த வேலைகளைச் செய்துவரும் நாகராஜுக்கு, மக்கள் நலனோ, மக்கள் படும் அவஸ்தையோ ஒரு பொருட்டல்ல. காரணம் ஒப்பந்த வேலை என்ற பெயரில் அடிப்பதெல்லாம் கொள்ளையோ கொள்ளைதான்!

செய்யத்துரை-

ten thousands crores contractor virudhunagar district aruppukkottai


தங்களுக்கு ஒத்துவரும் பொறியாளரை வைத்துத்தான் ஒப்பந்தப்பணிக்கான திட்ட மதிப்பீடே தயாரிக்கின்றனர். அதில்,  ஒரு கோடி ரூபாய்க்கான ஒப்பந்தப்பணியை இரண்டு மடங்கு அதிகமாக, அதாவது  2 கோடி ரூபாய் எனக்  காட்டுகின்றனர். டெண்டர் எடுக்கும்போதே தங்களுக்கு வேண்டிய பொறியாளர் குழுவை எங்கிருந்தாலும் அப்படியே அந்த மாவட்டத்துக்கு அள்ளிக்கொண்டு வருகிறார்கள். ஒப்பந்தப்பணிகளை ஆய்வுக்கு உட்படுத்துபவர்கள் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள். அவர்களும் இந்த பலே ஒப்பந்தகாரரின் ஏவலுக்கு ஒத்துழைப்பவர்கள்தான். ஏனென்றால், இடமாற்றம் செய்து  அவர்களை இந்த மாவட்டத்துக்கு இழுத்து வருவதே அந்த ஒப்பந்தகாரர்தானே!  ஒரு கிலோ மீட்டர் சாலையில் இரண்டு இடங்களில் மட்டும் விதிமுறைகளின்படி‘திக்னஸ்’ இருப்பதுபோல் போடுவார்கள். தரக்கட்டுப்பாடு அதிகாரிகளும் குறிப்பிட்ட அந்த இரண்டு இடங்களை மட்டும் ஆய்வு செய்துவிட்டு, சாலைப்பணி சரியான முறையில் நடந்திருக்கிறது என சான்றளித்து விடுகிறார்கள். இப்படித்தான், எந்த மாவட்டத்திலும் ஒப்பந்தப்பணியை ஆரம்பிப்பதற்கு முன்பே, அந்த மாவட்டத்துக்கு தங்களுக்கு சகலத்திலும் அட்ஜஸ்ட் செய்து போகக்கூடிய அதிகாரிகளைக் கொண்டுவருவது வாடிக்கையாகிவிட்டது. அதனால்தான், தமிழகத்தில் ஏனோதானோவென்று சாலை ஒப்பந்தப் பணிகள் அரைகுறையாகவே நடக்கின்றன.

ten thousands crores contractor virudhunagar district aruppukkottai

ரூ.600 கோடி ஒப்பந்தத்தின்படி, மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து கப்பலூர் வரையிலான சாலை.. விருதுநகர் மாவட்ட நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்கு ரூ,616 கோடி டென்டர்.. இதுபோல், தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள சாலைகளை ஐந்து ஆண்டுகள் பரமாரிப்பதற்கு ரூ.2 ஆயிரம் கோடி டென்டர் என எடப்பாடி ஆட்சியில் நாகராஜ் காட்டில் நான்-ஸ்டாப்பாக பணமழை கொட்டுகிறது.  


மேலிடத்தை வசமாகக் கவனித்துவிடுவதால், எளிய மனிதர்களை புழு, பூச்சிகளைப் போல்தான் பார்க்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சம்பவம்.  அருப்புக்கோட்டையில் சேவை நிறுவனம் நடத்துகிறார் அந்தப் பெண். பொது நிகழ்ச்சி ஒன்றிற்காக நிதி திரட்டியபோது, பெரும் செல்வந்தர் என்ற வகையில் செய்யாத்துரையிடமும் சென்றார். ‘நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நூறு பேருக்கு சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?’என்று கேட்டார். அதற்கு செய்யாதுரை ‘கவுரவப் பிச்சையா எடுக்குறீங்க? இதெல்லாம் ஒரு பொழப்பா?’என்று அவமானப்படுத்திவிட்டு, ஒரே ஒரு 500 ரூபாய் தாளை நீட்டினார். இவருடைய முரட்டுப் பின்னணி தெரிந்த அந்தப் பெண், மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு, அந்த அலுவலகத்தைவிட்டு வெளிவந்ததும், தன்னோடு வந்தவரிடம் அழுது புலம்பினார்.  
 

ten thousands crores contractor virudhunagar district aruppukkottai


செய்யாதுரை நாகராஜ், அதிகாரத்தில் இருப்பவர்களிடம்  வைத்திருக்கும் தொடர்பும் கணக்கும் ஒரு மாதிரியானது. திமுகவோ, அதிமுகவோ யார் ஆட்சியில் இருந்தாலும் ஒப்பந்தப்பணிகள் இவர்களுக்கே! மேலிட செல்வாக்கை மட்டுமே விரும்புபவர்கள் என்பதால், திமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுகவுக்கும், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுகவுக்கும் தாராளமாக நிதி அளிப்பார்கள். அதேநேரத்தில், அரசியல் கட்சிகளில் உள்ள ‘லோக்கல்’அல்லறை சில்லறைகள் நன்கொடை வசூல் எனக் கேட்டு இவர்களின் முன்னால் நிற்க முடியாது. விரட்டியடித்துவிடுவார்கள். 

ten thousands crores contractor virudhunagar district aruppukkottai


அரசியல் ரீதியான இவர்களின் நெருக்கத்தைப் பார்ப்போம்! முன்பெல்லாம்,  மு.க,அழகிரியின் பரிபூரண ஆசி பெற்றவர்களாக இருந்தார்கள். வே.தங்கப்பாண்டியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, அவருடைய தம்பி ரவிச்சந்திரன், உறவு வட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் என திமுக தொடர்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. அடுத்து அதிமுக பீரியடில் சசிகலா, டாக்டர் வெங்கடேஷ், அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம், அவருடைய மகன் ரவீந்திரநாத் குமார், தற்போது எடப்பாடி பழனிசாமி, அவருடைய மகன் மிதுன் என இவர்களின் அரசியல் உறவுகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. இந்தச் செல்வாக்கினால் தான், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை தங்களுக்குத் தேவையான மாவட்டங்களுக்கு இவர்களால் இடமாற்றம் செய்ய முடிகிறது. நேர்மையான அதிகாரிகள் எங்கெங்கோ பந்தாடப்படுவதும் நடக்கிறது.” என்று புகார் வாசித்தனர். 

‘நெடுஞ்சாலை ஒப்பந்தப்பணியில் இத்தனை முறைகேடுகளா?’என்ற கேள்வியுடன், செய்யாதுரை, நாகராஜ் தரப்பை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சித்தோம். அவர்கள் நம் லைனுக்கே வரவில்லை. அவர்கள் விளக்கம் அளித்தால் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறோம். 


தேர்தலின் போதெல்லாம் வாக்காளர்களைச் சந்தித்தே தீரவேண்டிய அரசியல் தலைவர்களே, சுயநலத்துக்காக இத்தகையோரிடம் தொடர்பும் உறவும் வைத்திருக்கும்போது, செய்யாதுரை, நாகராஜ் போன்ற ஒப்பந்தகாரர்கள் எப்படி மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்? 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“16 அடி இல்லை 32 அடி கூட பாய்வேன்” - விஜய பிரபாகரன் அதிரடி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMDK candidate Vijaya Prabhakaran speech at election campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில் முதன்முதலாக தேர்தல் களத்தை சந்திக்கிறார் விஜயகாந்தின் வாரிசான விஜய பிரபாகரன். தே.மு.தி.க சார்பில் விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் விஜய பிரபாகரன் பேசியதாவது, “விஜயகாந்த் உடைய தைரியம் எனக்கும் இருக்கிறது. அது ரத்தத்திலே எங்க அப்பா எனக்கு கொடுத்தது. ஆனால், அந்த தைரியத்தை வைத்து மட்டும் இந்த தேர்தலை என்னால் சந்திக்க முடியாது. அந்த தைரியத்தை மக்களாகிய நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிப்பதன் மூலம் கொடுக்க வேண்டும்.

மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட வேண்டும் என்று எங்க அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார். நிச்சயம் இந்த விருதுநகர் மக்களை தங்கத்தட்டில் வச்சு தாலாட்ட நான் தயாராக இருக்கிறேன். உங்க வீட்டில் இருக்கிற பசங்க வயசுதான் எனக்கும் இருக்கிறது. எனக்கும் பல ஆசைகள் இருக்கிறது, ஆனாலும் அதை எல்லாம் ஓரம் கட்டி ஒதுக்கி வைத்துவிட்டு எங்க அப்பாவோட கனவை நிறைவேற்றவும், எங்க கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் இந்த மக்கள் முன்னாடி நான் வந்து நிற்கிறேன் என்றால் மக்களுக்கு நீங்கள் எனக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

அதேபோல், இளைஞர்கள் பலரும் எத்தனையோ வாய்ப்பு தேடி சுற்றிக் கொண்டிருப்பார்கள். அந்த மாதிரி என் தந்தை தாய் ஸ்தானத்தில் இருக்கின்ற மக்கள் ஆகிய உங்களிடம் ஒரு வாய்ப்பை தருமாறு கேட்கிறேன். ஏனென்றால், வாய்ப்பு கொடுத்தால் தான் நாங்கள் என்ன செய்வோம் என்று உங்களுக்கு தெரியும். இரண்டு முறை காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து பத்து ஆண்டுகளாக எம்.பியாக ஆக்கி அவரை பார்த்தீர்கள். ஆனால், அவரது முகம் கூட பலருக்கும் தெரியாது. ஏன் அவர் பெயர் கூட யாருக்கும் தெரியாது.

எம்.ஜி.ஆர் வழியில் வந்தவர் விஜயகாந்த். இரண்டு தலைவர்களுமே, தன் சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த தலைவர்கள். அந்த வழியில் வந்தவர்கள் தான் அ.தி.மு.க- தே.தி.மு.க கூட்டணியும். ‘புலி 8 அடி பயந்தால் குட்டி 16 அடி பாயும்’ என்று சொல்வார்கள். நான் ஆணவத்தில் பேசவில்லை, எங்க அப்பாவோட ஆசை நிறைவேற்றுவதற்கு 16 அடி இல்லை 32 அடி கூட பாய்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் அந்த வாய்ப்பை கொடுத்தால் தான் அதை நிரூபிக்க முடியும். விஜயகாந்த் புதைக்கப்படவில்லை கோடிக்கணக்கான மக்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். இன்றைக்கு எம்ஜிஆர் மறைவு, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பெருசா பேசப்படுவது விஜயகாந்தினுடைய மறைவு மட்டும் தான்

யூடியூப், ரீல்ஸ் போன்றவற்றை பார்த்து, இளைஞர்களாகிய நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள். இந்தத் தொகுதியிலேயே தங்கி உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கிறேன். துளசி கூட வாசம் மாறும், ஆனால் தவசி வார்த்தை மாறவே மாறாது. சொன்னா சொன்னதுதான். நிச்சயமாக உங்களுக்கு சேவை செய்ய  தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.