Skip to main content

திருவாரூரில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும்;வணிகர்கள் அறிவிப்பு!!

Published on 09/09/2018 | Edited on 09/09/2018

 

STRIKE

 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறவிருக்கும் பந்த்திற்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.

 


நாட்டில் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, மேலும் பல்வேறு தொழில்களும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்த விலை உயர்வை கண்டித்து நாட்டில் பல்வேறு தரப்பினரும் விலை உயர்வை குறைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக விலையை குறைக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் தேசிய காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்சியினரும் 10-ம் தேதி நாளைய தினம் பந்த் அறிவித்துள்ளனர். 

 


இந்த பந்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு தொிவித்துள்ளது. இதனையடுத்து நாளைய தினம் திருவாருர்  மாவட்டத்தில் 10-ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தொிவித்துள்ளார். மேலும் வரும் 28-ம் தேதி ஜிஎஸ்டி, ஆன்லைன் வர்ததக நிறுவுனங்களை தடை செய்ய வேண்டும் தமிழக வர்த்தகர்களை பாதுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது அதற்கு அனைத்து கட்சியினரும் வர்த்தகர்களும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.