Skip to main content

நகரங்களில் மட்டுமே செல்லும் பத்து ரூபாய் நாணயங்கள்

Published on 11/03/2019 | Edited on 12/03/2019

பணம் படைத்த முதலாளிகள், நகர்புறங்களில் வாழும் மக்கள் , கிராமபுறங்களில் வாழும் மக்கள், சாலையோரம் வாழும் மக்கள் என்ற பிரிவுகளை தாண்டி அனைவரும் இச்சமூகத்தில் முக்கியத்துவமான அங்கங்கள் தான். சாலையோர மக்கள் ஒரு வேலை உணவு சாப்பிடுவதற்கு  மிகவும் அதிகப்படியான உழைப்பை அளிக்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட மக்கள் தங்களின் முழு உழைப்பை அளித்து அதிலிருந்து பெறக்கூடிய ஊதியத்தை கழிப்பதற்கு சிந்தித்தே செயல்பட வேண்டியிருக்கும். அச்சூழலில் இந்த பத்து ரூபாய் நாணயம் அவர்களை பெரும் மன உழைச்சலுக்கு தள்ளப்படுகின்றது.
 

10rs coin

தமிழகத்தில் பல இடங்களில் உள்ள வியாபாரிகளிடமிருந்து வங்கிகள் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதே இந்த பிரச்னையின் ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது.
சாலையோர கடைகள் முதல் ஷாபிங் காம்பிலக்ஸ் வரையுள்ள அனைத்து வியாபாரிகளும் தாங்கள் அன்றாடம் லாபம் பார்க்கும் பணத்தில் பெரும் பங்கு சில்லறைகளாகவே இருக்கும். அவ்வாறு சில்லறைகளாக வரும் பணத்தை குறிப்பாக பத்து ரூபாய் நாணயத்தை வங்கி அதிகாரிகள் முறையாக எந்த காரணமும் சொல்லாமல் வாங்க மறுப்பதால் சமூகத்தில் பண சுழற்சி துண்டிக்கப்படுகிறது.
 

10rs coin

10 ரூபாய் நாணயம் மறுக்கப்படுவதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது போலி பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாகவும் அதனாலேயே அவற்றை வாங்க மறுப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். 2005-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2011-ல் நடைமுறையில் கொண்டுவரப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் சில தவறான காரணங்களினால் மறுக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால் ரிசர்வ் வங்கி தற்போது 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை உருவாக்கி புழகத்தில் விட்டுள்ளது. இந்த நாணயத்தை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் பத்து ரூபாய் நாணயம் தவிர்க்கப்படுகின்றனர்.
 

இதனால் பள்ளி மாணவிகள் முதல் வயதான முதியோர் வரை சிரமத்திற்கு ஆளாகி விடுகின்றனர். இதற்கு ரிசர்வ் வங்கி பலமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் பல வியாபாரிகள் மற்றும் வங்கிகள்  அவர்களின் சிரமத்தை குறைக்கவும், வயதான பெரியவர்கள் மீதும் சாதாரண மக்கள் மீதும் அதிகப்படியான சிரமத்தை அளிக்கின்றனர். இதற்கு உடனடியாக தக்கநடவடிக்கையை ரிசர்வ் வங்கியும் தமிழக அரசும் இணைந்து  எடுக்க வேண்டும்.

 

 

பா.விக்னேஷ் பெருமாள்

சார்ந்த செய்திகள்

Next Story

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The president of Paytm resigned

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விஜய் ஷர்மா அறிவித்துள்ளார்.

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து இருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளை தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்துள்ளார். 

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார்.