பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரத்தினம் பிள்ளை (96). ஆரம்ப காலத்தில் மருத்துவர் ஆனதில் இருந்து அந்த பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்ததால் பத்து ரூபாய் டாக்டர் என பெயர் பெற்றார். பல ஆண்டுகளாக பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த ரத்தினம் சுமார் 65 ஆயிரம் சுகப்பிரசவரங்களை பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக மருத்துவர் ரத்தினம் காலமானதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரது மறைவு அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.