Skip to main content

பத்து ரூபாய் நாணயத்திற்கு சட்டை இலவசம்; விநோத விழிப்புணர்வு!

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
If you pay for next Rs.10 coins, you will get a shirt worth Rs.350 for free

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சொந்தமாக திருப்பத்தூர் நகர் பகுதி கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் எக்ஸ்போர்ட் ஷாப்பி என்ற பெயரில் சொந்தமான துணிக்கடை உள்ளது.

இந்த கடையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் வருகின்ற ஐந்தாம் தேதி வரை பத்து ரூபாய் நாணயம் ஐந்து கொடுத்தால் ரூ 350 மதிப்புள்ள ஒரு சட்டை மற்றும் பத்து காயின் கொடுத்தால் காலனி இலவசம் என இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதன் காரணமாக திருப்பத்துரை சுற்றியுள்ள இளைஞர்கள் பத்து ரூபாய் நாணயத்தைச் சேகரித்து கையில் வைத்துக் கொண்டு கடையின் முன்பு சட்டை வாங்க வாரிசைகட்டி நின்றனர்.

ஒரு நாளைக்கு 60 டோக்கன் மட்டுமே விநியோகிக்கப்பட்டதால்  மற்ற இளைஞர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இது குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில் திருப்பத்தூர் மாவட்டத்தை பொருத்தவரை எவரும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பத்து ரூபாய் நாணயத்துக்கு இலவச சட்டை என விழிப்புணர்வு ஏற்படுத்தினேன் என கூறினார்.

சார்ந்த செய்திகள்