தமிழ்நாடு அரசுக்கு ஆதரவாக 44 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக நியமனம்!  

Temporary appointment of 44 public prosecutors in support of the Government of Tamil Nadu!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் தமிழ்நாடுஅரசுக்கு ஆதரவாக ஆஜராவதற்கு, 44 அரசு வழக்கறிஞர்களைத் தற்காலிகமாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், 29 அரசு வழக்கறிஞர்களும், மதுரைக் கிளையில்15 அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், அரசு வழக்கறிஞர்கள் நியமன நடைமுறைகள் முடிக்கப்படும்வரை, இவர்கள் 44 பேரும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே26 அரசு வழக்கறிஞர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு பட்டியலில் திமுக வழக்கறிஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், தற்போதைய பட்டியலில் கூட்டணி கட்சியினருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

highcourt lawyers madurai high court TNGovernment
இதையும் படியுங்கள்
Subscribe