
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசனின் பதவிக்காலம் ஜுன் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி புதிய துணைவேந்தர் நியமனம் குறித்து சிண்டிகேட் உறுப்பினர்களின் கலந்தாய்வு கூட்டம், தமிழக உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் காணொலி வாயிலாக நடந்தது.
இதில் புதிய துணைவேந்தரை நியமிக்கும்வரை உயர்கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரியல் மைய இயக்குநர் சீனிவாசன், பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவர் பாலாஜி சாமிநாதன் ஆகியோர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)