temples tamilnadu government announced

Advertisment

தமிழகத்தில் நவம்பர் 16- ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் நவம்பர் 16- ஆம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டுமென வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துக்கொள்ளும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.